சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்
Updated on : 13 May 2019

வில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும்  ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி  இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார் இது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03.  இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .



 



 அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.



 



 படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது .



 



இப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70%  தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன.



 



ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள்,  அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா.



 



 தன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற பின்னும் அவளுக்கு என்ன நேர்கிறது? அவள் எவற்றையெல்லாம்  சந்திக்கிறாள் என்பதே மீதிக் கதை.சின்ன தடுமாற்றத்தில் விழுந்த அவளது வாழ்க்கையின் திசை மாற்றத்தைச் சொல்வதே 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03' படம்.



 



இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் ,வினோத் கிருஷன் ,சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா ,அக்ஷிதா, இரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர், நடித்துள்ளனர்.



 



படத்துக்கு ஒளிப்பதிவு :ஐயப்பன் என், இசை: சன்னி விஸ்வநாத் ,கதை: ரிஜேஷ் பாஸ்கர். ஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்துள்ளார்.



 



படப் பிடிப்பு கேரளாவின் பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோயில் , மார்த்தாண்டம், கோவை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.



 



பொள்ளாச்சி சம்பவங்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந் நேரத்தில் பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கிறது படம்.



 



பெண்களைப் பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும் படியும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும்படியும் காதல் என்கிற வலை பெண்களைச் சுற்றிப் பின்னம்படும் விதத்தையும் கூறி அறிவுறுத்தி காட் அலர்ட் தரும்படியும் இப்படம் இருக்கும் என்று நம்புகிறார் இயக்குநர் .



 



இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா