சற்று முன்

சர்ச்சையில் சிக்கிய வால்டர் படத்தின் தலைப்பு - சிக்கல் தீர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சி   |    மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் ராக்கெட்ரி   |    சுசீந்திரன் இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம்   |    சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட 'தும்பா' படக்குழுவினர்   |    'பிரேக்கிங் நியூஸ்’ ஜீவனாக மாறிய ஜெய்   |    வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்   |    சீனு ராமசாமியின் சமுதாய அக்கறை   |    51,682 சதுர அடி பரப்பளவில் 10 திரைகள் கொண்ட புதிய PVR மல்டிபிளக்ஸ்   |    விஜய் பிறந்தநாளையொட்டி 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்   |    பாசிட்டிவ் பல விருதுகள் பெற்ற குறும்படம்!   |    முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி   |    ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்   |    பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன்   |    விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மக்களை வியக்கவைத்த அருவம் டீசர்   |    விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்   |    நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா   |    கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து   |    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’!   |    ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |   

சினிமா செய்திகள்

சுவையை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைவ மற்றும் அசைவ உணவுகள்
Updated on : 07 May 2019

தெருவுக்கு நான்கு பிரியாணி கடை என்று உணவகங்கள் அதிகரித்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில், சுவை மற்றும் தரம் என்பது உணவகங்களின் எண்ணிக்கையை காட்டிலும் மிக குறைவாகவே இருக்கிறது. பிரம்மாண்டமான கட்டிடங்கள், ஏகப்பட்ட கிளைகள் போன்றவற்றால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பல உணவகங்களில் சுவை என்பது வெறும் வார்த்தையில் மட்டுமே இருக்கிறதே தவிர உணவுகளில் இல்லை என்பது தான், சாப்பாட்டு பிரியர்களின் வருத்தம். அத்தகைய வருத்தத்தை போக்கும் விதத்தில் பாரம்பரியமான சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் கொண்ட சில குறிப்பிட்ட ஓட்டல்களில் ஒன்றான ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ்’ மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம், சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ்’ ஓட்டலில் உள்ள அத்தனை உணவு வகைகளும் நா சுவைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற பாரம்பரியமிக்க உணவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சைனீஸ், அரேபியன் போன்ற அயல்நாட்டு உணவு வகைகளின் ஆதிக்கத்தால் நமது பாரம்பரியமான உணவு வகைகளை மறந்து போன மக்களுக்காக, தென்னிந்தியாவின் பாரம்பரியம் மிக்க உணவு வகைகளை, பாரம்பரியமிக்க சமையல் கலைஞர்கள் மூலம் சமைத்துக் கொடுப்பதால், திண்டுக்கல்லையும் தாண்டி பிற பகுதிகளிலும் இந்த ஓட்டல் பிரபலமாகி வருகிறது. உப்பு கறி பிரட்டல், உப்பு கறி சோறு, பிச்சி போட்ட கோழி கறி, நண்டு மிளகு வதக்கல், கொத்துக்கறி கசமுசா, எண்ணெய் கறி வெஞ்சனம், சட்னி மீன், தல கறி பிரட்டல் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளுடன், குழி தாழி வாழைப்பூ வருவல், பன்னீர் பிரை, வெற்றிலை பூண்டு சாதம், சின்ன வெங்காயம் பூண்டு சாதம் உள்ளிட்ட பாரம்பரியம் மிக்க சைவ வகை உணவு வகைகளும் இந்த ஓட்டலில் கிடைக்கிறது. எந்த ஓட்டலிலும் சுவைக்காத உணவு வகைகளைக் கொண்ட ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ்’ ஓட்டலில் கோடைக்காலத்திற்கு ஏற்ற பழை சோறு, கம்மங் கூல், இளநீர் பாழாசம் போன்ற குளிச்சியான உணவுகளும் கிடைக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா