சற்று முன்

சீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்   |    ராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம்   |    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி   |    சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா   |    நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா   |    மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த்   |    விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப்   |    திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி   |    சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி   |    தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா   |    ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி   |    சண்டைக்கு தயாராகும் யோகிபாபு   |    ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது   |    பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை   |    தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'   |    விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர்   |    அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு   |   

சினிமா செய்திகள்

பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்
Updated on : 24 April 2019

"எனை சுடும் பனி" எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் "என் காதலி சீன் போடுறா " படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர்.  

உபாசனா RC , சுமா பூஜாரி ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு வெங்கட், இசை அருள்தேவ், பாடல்கள் ராம்ஷேவா வசந்த், கானா சரண், கலை அன்பு, நடனம் சாண்டி ,சிவசங்கர்,லாரன்ஸ்சிவா, ஸ்டண்ட் டேஞ்சர் மணி, தயாரிப்பு மேற்பார்வை ஜீவா.  

படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது... 

படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்.. 

சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும்... உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கதை.  இந்தபடத்தில்  கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்று நடிக்கவுள்ளார். இந்த கதையில் நடக்கும் ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகள் இடம் பெறுகின்றன.  

படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா