சற்று முன்

ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |   

சினிமா செய்திகள்

ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்
Updated on : 22 April 2019

அது வேற,  இது வேற என்ற படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ்  s.ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு "ஒபாமா உங்களுக்காக" என்று பெயரிட்டுள்ளார்.



 





பலரிடம் கதை கேட்டு ,ஆராய்ந்து தேர்வு செய்த படம் தான் "ஒபாமா உங்களுக்காக "படத்தின் இறுதி கட்ட பணிகள்  நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது . 



 





அரசியலை அடித்து துவைத்து காயப்போடுகிற படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் பிருத்வி நடிக்கிறார். ஜனகராஜ் இது வரை ஏற்றிராத  புது அவதாரம் ஏற்கிறார்.



 





புதுமுகநாயகி பூர்ணிஷா அறிமுகமாகிறார்.இயக்குநர்களாகவே விக்ரமன் ,கே.எஸ். ரவிக்குமார் ரமேஷ்கண்ணா ,மற்றும் T சிவா ,நித்யா, ராம்ராஜ் ,தளபதி தினேஷ் ,செம்புலி ஜெகன் ,கயல் தேவராஜ், விஜய் tv புகழ் கோதண்டம் ,சரத் ஆகியோர் நடிக்கிறார்கள்.





 

ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருக்கிறார்.



 





பாடல்கள் வைரமுத்து, எடிட்டிங் B.லெனின், ஒளிப்பதிவு   தினேஷ்ஸ்ரீநிவாஸ், நடனம் சுரேஷ், ஸ்டண்ட் தளபதி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை பெஞ்சமின்.

 





"பாஸ்மார்க் "படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை "நாநிபாலா என்று மாற்றிக் கொண்டு   இப்படத்தை இயக்கியுள்ளார்.



 





படத்தைப்பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..



 





தாமஸ் ஆல்வா எடிசன் போனை  கண்டுபிடித்தது பேசுவதற்காகத் தான் ஆனால் ஆண்ட்ராய்ட் மொபைலில்  பார்க்க முடியாததோ ,சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது. "ஒபாமா  உங்களுக்காக" படத்தின் கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா