சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு
Updated on : 22 April 2019

காலாட்படை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நிதின்சத்யா. வசூல்ராஜா MBBS, பிரியாணி, சென்னை 600028, அரண்மனை ஆகிய படங்களில் நடித்தவர்.



 



சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா.



 



தனது தயாரிப்பு நிறுவனமான "ஷ்வேத் - எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்" சார்பாக ஜருகண்டி என்ற படத்தை தயாரித்த நிதின்சத்யா இரண்டாவதாக புதிய படமொன்றை அதிக பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறார்.



 



இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



 



வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 



 



இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது. 



 



சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய SG சார்லஸ் இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.



 



தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 



 



இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு ஜெரால்டு ஆனந்த், கலை ஆனந்த் மணி, சண்டைப்பயிற்சி மிராக்கல் மைக்கேல்.



 



பெயரிடப்படாத இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா