சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

சினிமா செய்திகள்

அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது
Updated on : 17 April 2019

எஸ்.பி. சினிமாஸ் சார்பில் எஸ்பி சங்கர் மற்றும் சாந்தபிரியா தயாரிக்க பரத் நீலகண்டன் இயக்கியிருக்கும் படம் K13.  



 



K13 ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சாம் சிஎஸ் அவரது பின்னணி இசையால் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 



 



படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. 



 



SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து கூறும்போது, "டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும்.



 



இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தான். எங்கள் புத்திசாலித்தனமான ரசிகர்கள் டிரெய்லரின் உண்மையான இலக்கணத்தை புரிந்து கொண்டதும், அதில் முக்கிய கதாபாத்திரங்களை புரிந்து கொண்டதும், அதை பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களை விரைவில் வெளியிடவும், இந்த கோடை விடுமுறையில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.



 



நடிகர்களின் அபார நடிப்பை பற்றி SP சினிமாஸ் சாந்தபிரியா கூறும்போது,  "தயாரிப்பாளர்கள் அருள்நிதியை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வருவதை பார்க்க செயற்கையாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை, இது ஒன்றும் புதிதல்ல. இன்று, சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் பல கருத்துக்களில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகிறது. அவர் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட ஒரு நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அவர் நடித்தால் அந்த திரைப்படத்திற்கு அதுவே பெரிய அளவில் வலு சேர்க்கிறது. இதனை ஒரு தயாரிப்பாளராக வெறுமனே சொல்லவில்லை, மக்கள் ஏற்கெனவே அவரை அங்கீகரித்து, பாராட்டியுள்ளனர்" என்றார்.



 



இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா