சற்று முன்

சர்ச்சையில் சிக்கிய வால்டர் படத்தின் தலைப்பு - சிக்கல் தீர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சி   |    மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் ராக்கெட்ரி   |    சுசீந்திரன் இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம்   |    சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட 'தும்பா' படக்குழுவினர்   |    'பிரேக்கிங் நியூஸ்’ ஜீவனாக மாறிய ஜெய்   |    வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்   |    சீனு ராமசாமியின் சமுதாய அக்கறை   |    51,682 சதுர அடி பரப்பளவில் 10 திரைகள் கொண்ட புதிய PVR மல்டிபிளக்ஸ்   |    விஜய் பிறந்தநாளையொட்டி 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்   |    பாசிட்டிவ் பல விருதுகள் பெற்ற குறும்படம்!   |    முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி   |    ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்   |    பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன்   |    விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மக்களை வியக்கவைத்த அருவம் டீசர்   |    விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்   |    நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா   |    கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து   |    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’!   |    ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |   

சினிமா செய்திகள்

காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்
Updated on : 05 April 2019

மாடலிங் உலகிலிருந்து திரையுலகிற்கு வந்துவிட்டாலும் இன்னமும்  மாடலிங் உலகின் அத்தனை முக்கிய நிகழ்வுகளுக்காக உலகம் முழுக்க பறந்துகொண்டிருக்கிறது இந்த தமிழ்ப் பறவை.  வெகு செலக்டிவ்வாக அதேசமயம் சேலஞ்சிங் ரோலுக்காக காத்திருக்கும் கொக்கு போல "போதை ஏறி புத்தி மாறி" படத்தில் மிக முக்கியமான ரோல் சிக்க அதை இப்போது விழுங்கிக்கொண்டிருக்கிறார்.  படம் பற்றிக் கேட்டால் இதில் நான் பண்ணுவது அர்த்தமுள்ள ரோல்னு சொல்வேன்... என்கிறார் மீரா எடுத்த உடனே... போதை ஏறி புத்தி மாறின்னு டைட்டிலைக் கேட்டவுடன் குடி குடியைக் கெடுக்கும்னு அட்வைஸ் பண்ணப்போற படம்னு நினைச்சா அதுவல்ல இது...  தடம் மாதிரி துள்ளத் துடிக்க சீட் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தும் த்ரில்லர் வகைப் படம்.  தலைப்புக்கு சம்பந்தத்தை கிளைமாக்ஸில் மட்டுமே பார்க்க முடியும்.  இயக்குநர் கே ஆர் சந்துரு குறும்பட இயக்குநர். கதை சொன்ன உடனே இந்த ரோலை செய்துவிடவேண்டும்னு தோணுச்சு.  படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கேரக்டரும் முக்கியமான வேலையை செய்யக்கூடிய கதை.  கவிதை மாதிரி ஒளியைக் கையாள்பவர் பாலசுப்ரமண்யெம் சார். சிறப்பா வந்திருக்கு படம்.  இன்னும் முக்கிய மூன்று படங்களின் பேச்சு வார்த்தையில் இருக்கிறேன்.  கதைக்காக மொட்டை போடச் சொன்னால் கூட போடுவேன்.  நான் தேசிய விருது வாங்கவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அவர் இப்போது இல்லை. ஆனால் அதை நனவாக்குவேன். அப்படியொரு கதை கிடைக்கும்பட்சத்தில் காசே வாங்காமல் கூட நடிப்பேன் என்கிறார் மீரா.  தமிழ்ப் பெண்கள் கிளாமர் என்றாலே காத தூரம் ஓடுவார்களே எனக் கொக்கினால்.. மாடலிங் உலகில் இல்லாத கிளாமரா... அங்கிருந்து வந்ததால்... அதன் எல்லை தெரியும். கிளாமர்னு கேட்ட உடனே ஓடமாட்டேன். கதையின் முக்கியத்துவத்தைப் பொருத்து கண்களைப் பறிக்கலாம் என்கிறார் இந்த சென்னைக் கிளி!  தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களும் சிறப்பாக வலம் வரட்டுமே!!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா