சற்று முன்

பொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர்   |    கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர்   |    இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |   

சினிமா செய்திகள்

பேயாக நடிக்கும் யோகி பாபு
Updated on : 15 March 2019

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படம் "பட்டிபுலம்" . இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக வீரசமர், கதாநாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்கள். அமிதாராவ் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர். மேலும் இவர்களுடன் சேரன் ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி  ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஆர்.கே.வர்மா, இசை வல்லவன், எடிட்டிங் ஆர்.ஜி.ஆனந்த், 

கலை வீரசமர், நடனம் விஜய் ரக்‌ஷித், ஸ்டண்ட் மகேஷ், பாடல்கள் மா.கா.பா.ஆனந்த், வல்லவன், கானா ராஜேஷ், கானா வினோத், தயாரிப்பு மேற்பார்வை அயன்புரம் ராஜு, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ். இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர், தயாரிப்பு திருமுருகன், படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கூறியதாவது, 

 நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பார்முலா படி யோகி பாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு, அந்த ஊரில் உள்ள சில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பது தான் கதை...

இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்..

படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்..

படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது என்று கூறினார் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா