சற்று முன்

மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' பூஜையுடன் தொடங்கியது
Updated on : 13 March 2019

பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது, மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்வது மற்றும் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் படங்களை கொடுப்பவரை தான் 'நட்சத்திரம்' என்று வரையறுக்கிறோம். அந்த வகையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களால் அவரது கேரியர் கிராஃபை மேலே நகர்த்தி செல்கிறார். அவரது குடும்ப பொழுதுபோக்கு படமான 'மிஸ்டர் லோக்கல்' மே 1ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத ஃபேண்டஸி படமான SK14 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான 'ஹீரோ' இன்று காலை (மார்ச் 13) ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, KJR ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கிறார்.



 



தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, "KJR ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு தயாரிப்பாளராக, மிகச்சிறப்பான குணாதிசயங்களை கொண்ட ஒரு புகழ்பெற்ற குழுவுடன் பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன். வணிக ரீதியிலான அம்சங்களை கொண்ட மற்றும் அதே நேரத்தில் வித்தியாசமான கதையம்சம் உள்ள புது முயற்சிகளில் நடிக்கும் ஒரு நடிகரை கண்டறிவது மிகவும் கடினம். நிச்சயமாக சிவகார்த்திகேயன் இந்த இரண்டு தளங்களிலும் மிகச்சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். வணிக ரீதியிலான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்டுகளுக்கு அவர் தரும் தாராளமான முக்கியத்துவம் தான் அவரை ஒரு நட்சத்திரமாக நிலை நாட்டியிருக்கிறது. "ஹீரோ" படமும் வணிகரீதியான அம்சங்கள் கலந்த ஒரு படம். அதன் கதையம்சங்கள் ரசிகர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் உடன் இணைந்து பணிபுரிவது என் கனவு. அவருடன் பணிபுரியும் அனுபவத்தை நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவனா போன்ற இளம் மற்றும் திறமையான நடிகைகள் நடிப்பது படத்திற்கு கூடுதல் மைலேஜ் ஆக இருக்கும்" என்றார். 



 



இயக்குனர் பிஎஸ் மித்ரன் பற்றி அவர் கூறும்போது, "மித்ரன் ஏற்கனவே தனது திறமைகளை ஒரு இயக்குனராக தனது இரும்புத்திரை படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கதை சொல்ல அவர் வந்தபோது, முந்தைய படத்தின் சாயல் கொஞ்சமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் முற்றிலும் வேறுபட்ட மற்றும் புதிய கதையை சொல்லி என்னை அசத்தினார். அவரது முந்தைய திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஒரு சாதாரண பார்வையாளனாக பல இடங்களில் புத்துணர்ச்சியையும், கதையோடு ஒன்ற வைக்கும் விஷயங்களையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது" என்றார்.



 



சிவகார்த்திகேயனின் "ஹீரோ" படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு கையாள்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா