சற்று முன்

ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |    போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்   |    சுவையை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைவ மற்றும் அசைவ உணவுகள்   |    அரவிந்த்சாமி நடிக்கும் டிடெக்ட்டிவ் திரில்லர் படம்   |    என் முகத்தை பார்த்துவிட்டு இது ஹோம்லியான கதபாத்திரமாச்சே என தயங்கிய இயக்குனர்   |    மதுரை தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணம்   |    பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |    அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா   |    அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம்   |    அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது   |    70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம்   |    கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா   |    ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர்   |    காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்   |    ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி'   |    சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண்   |   

சினிமா செய்திகள்

காதலை கவிதைத்துவமாக சொல்லப்பட்ட தாதா 87 மறுவெளியீடு
Updated on : 12 March 2019

ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நரேன் பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் "சித்திரம் பேசுதடி". இப்படம் முதலில் வெளியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.



 



இன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது. 



 



கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான "தாதா 87" திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.



 



தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில்  முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.  



 



இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.



 



மேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது "தாதா 87".



 



காதலை கவிதைத்துவமாக சொல்லப்பட்ட தாதா 87 படத்தில் தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடினர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா