சற்று முன்

ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |    போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்   |    சுவையை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைவ மற்றும் அசைவ உணவுகள்   |    அரவிந்த்சாமி நடிக்கும் டிடெக்ட்டிவ் திரில்லர் படம்   |    என் முகத்தை பார்த்துவிட்டு இது ஹோம்லியான கதபாத்திரமாச்சே என தயங்கிய இயக்குனர்   |    மதுரை தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணம்   |    பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |    அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா   |    அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம்   |    அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது   |    70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம்   |    கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா   |    ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர்   |    காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்   |    ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி'   |    சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண்   |   

சினிமா செய்திகள்

சிவகாத்திகேயனின் 2வது தயாரிப்புக்கு இசையமைப்பாளர் தேர்வு முடிந்தது
Updated on : 12 March 2019

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் "தயாரிப்பு எண் 2" படத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துமே கோலிவுட்டில் பரபரப்பான அலைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, 'பிளாக் ஷீப்' மூலம் மிக பிரபலமான பொழுதுபோக்கு கலைஞர்களினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு விடையை அளித்துள்ளது படக்குழு. சமீபத்திய இசை சென்சேஷன் ஷபிர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.



 



"ஷபிர் இசையமைத்த ஆல்பங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், குறுகிய காலத்திலேயே அவர் ஒரு சென்சேஷனாக மாறியிருக்கிறார். மிக குறுகிய காலத்தில் வெற்றி பாடல்களை வழங்கியிருக்கிறார் ஷபீர். மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கியது தான் ஷபீர் என்ற இசைக்கலைஞரை அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம் " என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.



 



இசையமைப்பாளர் ஷபிர் கூறும்போது, "துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலை முடுக்கெல்லாம் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது" என்றார்.



 



சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த 'தயாரிப்பு எண் 2' படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல பிரபலமான யூடியூபர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா