சற்று முன்

இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் 'ஹவுஸ் ஓனர்'   |    பேயாக நடிக்கும் யோகி பாபு   |   

சினிமா செய்திகள்

திருநங்கை குணவதி சிறந்த பெண்மணியாக தேர்வு
Updated on : 11 March 2019

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 07.03.2019 அன்று மகத்துவ மகளிர் விருதுகள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.   இதில் திண்டுக்கல்லை சேர்ந்த திருநங்கை குணவதி சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கும் சக பெண்களோடு விருது வழங்கப்பட்டது இதுகுறித்து குணவதி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் “பெண்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் முன்னேறி வருகின்ற இவ்வேளையில் சர்வதேச பெண்கள் தினத்தில் திருநங்கையான என்னையும் அழைத்து விருது வழங்கி கௌரவித்தது எங்களை மேலும் ஒரு அங்கீகாரம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவது போல உள்ளதாக நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று குணவதி நெகிழ்ச்சியுடன் பேட்டியில் கூறினார். கல்வித்துறையில் கலைத்துறையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன கல்வியாளர் எஸ்பிடி கனகசபை மற்றும் தொழிலதிபர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ட்ரீம் விங்ஸ் மற்றும் ‘F Face கிரியேட்டர்ஸ்’ன் நிர்வாகிகள் திரு.கோபி, திருமதி, சியாஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தனர். குமரன் பல் மருத்துவமனை மருத்துவர்கள் திரு.சுதர்சன் -வனிதா சுதர்ஷன் மற்றும் விவேரா கிராண்ட் நிர்வாக இயக்குனர் திரு.விவேக் அவர்கள், மற்றும் நெக்ஸ் ஆட் திரு.டேனியல் ஷ்சாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா