சற்று முன்

இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் 'ஹவுஸ் ஓனர்'   |    பேயாக நடிக்கும் யோகி பாபு   |   

சினிமா செய்திகள்

கே 13 படத்தில் நடிக்கும் இயக்குனர்
Updated on : 11 March 2019

ஒரு சில படங்களில், முன்னணி கதாபாத்திரங்களுக்கு இணையாக மிக வலுவாக நிற்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் 'திரில்லர்' வகை படங்களில் அமையும். அந்த கதாபாத்திரங்கள் தான் விறுவிறுப்பாக படத்தை கொண்டு செல்ல தூண்டுதலாக அமையும். அந்த வகையில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கும் 'கே13' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது குறித்து இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது, "ஸ்கிரிப்ட்டை முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நல்ல நடிகரை தேடிக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் முழு திரில்லர் விஷயங்களையும் இந்த கதாப்பாத்திரம் தான் தூண்டுகிறது. தனிப்பட்ட முறையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தேன். அவரிடம் இணை இயக்குனர்களாக இருக்கும் என் நண்பர்கள் மூலம் அவரை அணுகினேன். அவர் நடிக்கும் காட்சிகளில் நடிகை காயத்ரியும் இருந்தார், இருவருமே மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். இப்போது கூட, நாங்கள் இந்த குறிப்பிட்ட காட்சியை படம் பிடித்ததை பற்றி நினைக்கும்போது, அது உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த படத்தின் முதல் ஷாட் அது தான், அனுபவம் வாய்ந்த இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், காயத்ரி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் வேலை வாங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது" என்றார். ஆதிக் ரவிச்சந்திரன் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, "ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் ஒரு மிகச்சரியாக நடித்துக் கொடுத்தார்.படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் மற்றும் பாராட்டப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார். எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த கே13 படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். தாமரை பாடல் எழுதுகிறார், ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்குனராக பணிபுரிய, சுதேஷ் சண்டைப் பயிற்சியை கையாண்டிருக்கிறார்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா