சற்று முன்

கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |    'சீயான் 62' வில் ஒப்பந்தமாகியுள்ள துஷாரா விஜயன்!   |    நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ள 'மயோன்' பாடல்!   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'கேன் (can)' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான 'புஷ்பா: தி ரூல்' டீசர் வெளியாகவுள்ளது!   |    நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி...20 வருட கனவு தற்போது நினைவாகியது!   |    குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்கூல் லீவ் விட்டாச்சு' ஆல்பம் பாடல்!   |    'தி ஃபேமிலி ஸ்டார்' ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர் - தயாரிப்பாளர் தில் ராஜு   |   

சினிமா செய்திகள்

பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன் - கீர்த்தி பாண்டியன்
Updated on : 19 February 2019

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்  ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். 



 



சினிமா குடும்பத்தில் இருந்து வந்தால் எளிதாக சினிமா கதவுகள் திறந்து விடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் கீர்த்தி விஷயத்தில் அப்படியில்லை. "நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்" என்றார். 





கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார். சினிமாவுக்குள் நுழைந்தாலும் அவருக்கு மேடை நாடகங்கள் உடன் உள்ள பிணைப்பு குறையாது என்பதில் உறுதியாக இருக்கிறார். "அப்படி எல்லாம் நடக்க விடமாட்டேன், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு பெரிய மேடை நாடகத்தை தயாரிக்க இருக்கிறேன்" என்கிறார். 



 



சும்மா ஏதோ ஒரு நடிகை என்று பெயர் பெறுவதை விட சிறந்த நடிகை என்ற பெயரை பெறுவதே என்னுடைய இலக்கு. இப்படிபட்ட முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் தங்களுடைய இலக்குகளை அடைவதற்கு பல சவால்களை சந்திக்கவேண்டியிருக்கும். நிறைய விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும். 





இதனால் "பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை" என்கிறார்.



 



இந்த காமெடி அட்வென்சர் திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். 





இதில் கனா புகழ் தர்ஷன் உடன் இணைந்து விஜய் டிவி தீனாவும் நடிக்கிறார்கள்  . "ஹீரோ, ஹீரோயின், காமெடியன் என அதை பிரித்து பார்க்க நான் விரும்பவில்லை, மூன்று பேரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறோம் என்கிறார் கீர்த்திபாண்டியன். 





இந்த படத்துக்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். இந்த படத்தில் VFX மற்றும் CGI ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. 



 





 



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா