சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

சினிமா செய்திகள்

மூன்று படங்கள் வெளிவரப்போகும் பூரிப்பில் சீனுராமசாமி
Updated on : 19 February 2019

விஜய் சேதுபதி என்ற யதார்த்த நாயகனை 2010ல் வெளிவந்த 'தென்மேற்குப் பருவக்காற்று' மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் சீனுராமசாமி. 



 



அதனை தொடர்ந்து 2016ல் விஜய் சேதுபதியை தர்மதுரை மூலம் மக்கள் மத்தியில் மக்கள் செல்வனாக அமர செய்தவர் சீனுராமசாமி. 



 



கிராம மண் வாசனை நிறைந்த படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் சீனுராமசாமி. அதற்கு சான்று அவர் இயக்கிய கூடல் நகர், 'தென்மேற்குப் பருவக்காற்று', தர்மதுரை ஆகிய படங்கள் ஆகும். 



 



இப்படி நாட்டின் முதுகெலும்பான விவசாயம். மண் வாசனை என கிராம மக்களின் வாழ்வியல் ஆதாரங்களையம் வாழ்க்கையையும் யதார்த்தமாக மக்களுக்கு தன் படங்கள் மூலம் கொண்டு சேர்ப்பவர் சீனு ராமசாமி. 



 



இப்படி சொற்ப வெற்றி  படங்களை இயக்கி இருந்தாலும் கொடுத்த அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. 



 



இந்த வருடம் அவருடைய மூன்று படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர காத்திருக்கின்றன அவை ஒன்று உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த  'கண்ணே கலைமானே'. இரண்டாவது விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த 'மாமனிதன்', மூன்றாவது விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா நடித்த 'இடம் பொருள் ஏவல்'.



 



'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியாக உள்ளது. மற்ற இரண்டு படங்களும் இந்த வருடம் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளன. இந்த மூன்று படத்திற்கும் இசை யுவன்ஷங்கர் ராஜா



 



 'கண்ணே கலைமானே' பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீனுராமசாமி 



 



“தர்மதுரை' போன்ற நல்ல தரமான படத்தை தந்தும் அடுத்த பட வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது.  “தர்மதுரை' படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த  'கண்ணே கலைமானே' இந்த வாரம் வெளி வருகிறது. உறவுகளின் அன்பை வெளிப்படுத்தும் உன்னதமான படம் இது,” என்று நெகிழ்ந்து படத் தயாரிப்பாளர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.



 



கடந்த இரண்டு வருடங்களாக வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த சீனு ராமசாமிக்கு இந்த வருடம் அவரது இயக்கத்தில் அடுத்தடுத்து 'கண்ணே கலைமானே, மாமனிதன், இடம் பொருள் ஏவல்' ஆகிய வெற்றி பட  வாய்ப்புகளை அள்ளித்தந்துள்ள நெகிழ்வில்  சீனு ராமசாமி.



 



அவருடைய வெற்றி பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா