சற்று முன்

பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |    அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா   |    அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம்   |    அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது   |    70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம்   |    கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா   |    ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர்   |    காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்   |    ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி'   |    சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண்   |    ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவம் - யோகி பாபுவுடன் யாஷிகா   |    ஒருவருடைய பலமான தூண்டுதலால் என் கடமை தடைபட்டது - நாசர்   |    மகேந்திரன் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்   |    மகேந்திரன் மறைவிற்கு இரங்கல் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்   |    'ஏசியன் அரப் விருது 2019' வென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்   |    முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய நடிகை   |   

சினிமா செய்திகள்

மாமனிதன் படப்பிடிப்பின் தற்போதைய நிலை
Updated on : 12 February 2019

யுவன் சங்கர் ராஜாவின் YSR Production நிறுவனம் சார்பில்   சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாமனிதன்'. மூவர் கூட்டணியான சீனுராமசாமி, யுவன் சங்கர் ராஜா, விஜயசேதுபதி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படம். மேலும் கார்த்திக் ராஜாவின் K Productions-ம் பங்கு வகித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, கார்த்திக்ராஜா மூவரும் சேர்ந்து இசையமைத்திருப்பது இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாக இருக்கிறது. ஏற்கனவே விஜய்சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய வெற்றி படங்களை தந்தவர் சீனுராமசாமி. மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறார். இத்திரைப்படமும் அமோக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மாமனிதன் படத்தின் பூஜை கடந்த ஆண்டு டிசம்பர் 15  அன்று போடப்பட்டு தேனீ, கேரளா, காசி ஆகிய இடங்களில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.  தற்சமயம்  37 நாள் படப்பிடிப்பில் நிறைவு பெற்றது மாமனிதன் படப்பிடிப்பு. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. 

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் M சுகுமார். இவர் பைரவா, தர்மதுரை, காக்கி சட்டை, மான் கராத்தே ஆகிய வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த படத்தில் காயத்ரி விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

மிக விரைவில் வெளியாகும் இந்த படம் வெற்றி பெற இந்த படத்திற்கும், படக்குழுவினருக்கும் தமிழ்சகாவின் வாழ்த்து.   

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா