சற்று முன்

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா   |    நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா   |    மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த்   |    விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப்   |    திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி   |    சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி   |    தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா   |    ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி   |    சண்டைக்கு தயாராகும் யோகிபாபு   |    ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது   |    பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை   |    தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'   |    விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர்   |    அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு   |    மூன்று அமைப்புகள் முன்னெடுத்துள்ள விண்ணமலை ஏரி சீரமைப்பு பணி   |    ஹீரோவிடமிருந்து மகளை காக்க நடிகையின் தாயார் செய்த வேலை   |    மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தனுஷ் பட போஸ்டர்   |   

சினிமா செய்திகள்

துப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன் , அலட்டிக்காத ஹீரோ..!
Updated on : 11 February 2019

நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலக்ப்போரின் கடைசி குண்டு "படத்தின் படப்பிடிப்பு சென்னை,மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்துவருகிறார்கள். நீலம் புரொடக்சன் பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.  கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.



இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம் , மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தன்ர். 



நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தனர் குழுவினர்.  கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது.   அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே ஹேவேஸில் லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுத்தி வளைத்துப் பிடித்தனர். 



இதை அறிந்திராத நாயகன் ' நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு ? என்று கேட்க .... நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க , இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்க்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே   நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் சாலையில் லேசாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிளம்பும்போது நிஜமாக இருக்கிறது படப்பிடிப்பு வாழ்த்துக்கள் தினேஷ் என்று பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் கமாண்டோ படைவீரர்கள்.



கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா