சற்று முன்
சினிமா செய்திகள்
Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா
Updated on : 11 February 2019

தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.
"இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் இயக்குனர் பாலய்யா. இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
மேலும், இந்த பெயரிடப்படாத படம் 'டார்க் காமெடி த்ரில்லர்' வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் (அ) ராமதாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.
ஷமந்த் (இசை), ஏ.விஸ்வநாத் (ஒளிப்பதிவு), எம்.முரளி (கலை இயக்குநர்) மற்றும் தினேஷ் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
சமீபத்திய செய்திகள்
நீண்ட இடைவெளிக்குப்பின் ராவுத்தர் மூவிஸின் புதிய படம்
மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்' புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம்.
இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" எனும் படத்தை 'நெடுஞ்சாலை' புகழ் ஆரி நடிப்பில் தயாரித்து வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார்.
இதில் கதாநாயகியாக சாஷ்வி பாலாவும், முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார்.
விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பார்வை (FirstLook)போஸ்டரை இன்று நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.
இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் கண்ணீர் அஞ்சலி
காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தென் இந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
“காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த தாக்குதலுக்கு அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், அதற்கு ஒட்டுமொத்த நாட்டுடன் நடிகர் சமூகமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒற்றுமையுடன் ஆதரவளிக்கும் என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.
48 மணிநேரம் தூக்கத்தை தொலைத்த விஷால்
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் -ல் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .
நடிகர் R.பார்த்திபன்,ராதாரவி,கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.
படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும் , படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார்.
ஏற்கனவே இந்த படத்திற்காக விஷால் தனது கடும் முயற்சியினால் மிடுக்காக ஒரு கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் எழிலின் புதிய படம்
சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஒரு பிரமாண்டமான படத்தை பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர் சசி தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த படத்திற்கு இன்று எளிமையாக ஒரு கோயிலில் பூஜை போட்டு துவங்கி உள்ளார்கள்.
இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
படத்திற்கு இசை C.சத்யா.
மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
கணவன் மனைவி உறவை சித்தரிக்கும் படம்
“கண்களை மூடாதே“ செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து,தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் K.E.எட்வர்ட் ஜார்ஜ். இவருக்கு ஜோடியாக சித்ராய் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன் கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு திஷாத் சாமி, எடிட்டிங், தமிழ்மணி சங்கர், துணை இயக்கம், அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன்.
திருமணத்திற்கு பிறகு ஒரு கணவன் மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதையும், நம் பாரம்பரியம் என்ன என்பதையும் கூறும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பகதை தான் “ கண்களை மூடாதே “
இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
வரும் பிப்ரவரி 28ம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
அசுரகுரு டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்
JSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் "அசுரகுரு"
விக்ரம் பிரபு சிறப்பான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் இவர்களுடன் பாகுபலி சுப்பாராஜ், யோகிபாபு, நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் டீசரை வெளியிட்டார். அசுரகுரு படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அசுரகுரு படக்குழுவினர் மிகுந்த மாகிழ்சியில் உள்ளனர்.
சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள "அசுரகுரு" விரைவில் திரைக்கு வரவுள்ளது
இயக்கம் - ஏ. ராஜ்தீப்
இசை - கணேஷ் ராகவேந்திரா
ஒளிப்பதிவு - விசாரணை ராமலிங்கம்
வசனம் - கபிலன் வைரமுத்து, சந்துரு மாணிக்கவாசகம்
பாடல்கள் - கபிலன் வைரமுத்து, பழநிபாரதி
குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் கண்களை மூடாதே
செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் K.E.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் “ கண்களை மூடாதே “
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து,தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் “K.E.எட்வர்ட் ஜார்ஜ் “
நாயகியாக சித்ராய் நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன் கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – திஷாத் சாமி
எடிட்டிங் - தமிழ்மணி சங்கர்
துணை இயக்கம் - அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன்
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
முற்றிலும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பகதை தான் இந்த படம். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும், நம் பாரம்பரியம் என்ன என்பதை உணர்த்தும் கதை.
படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் நமக்கு இது போல மனைவி கிடைக்காதா என்று மனதில் தோன்றும். அதே மாதிரி எல்லா பெண்களுக்கும் தங்களுக்கு இதுபோல் கணவன் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஏங்குவார்கள் அப்படியான திரைக்கதை இது.
படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகிறது என்றார் இயக்குனர் K.E.எட்வர்ட் ஜார்ஜ்.
ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா - சிம்ரன்
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்,“இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது.இந்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இவர்களைத் தவிர மற்ற நடிகர்கள் ,நடிகையர்களின் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.” என்றார்.
இதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜீவா , ஷாலினிபாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொரில்லா ’என்ற காமெடி படம் கோடையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் திரு.லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள்முருகன், பின்னணியிசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எஃப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப் , யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில்,“எங்கள்நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI)என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்த தருணத்தில் இந்த படத்தின்இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். நான் விநாயகன் பக்தன், அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் அவரை பார்த்தவுடன் பிடித்தவிட்டது. அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்த படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.
மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில்,“இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம். ஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள். மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியாவிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படத்தில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இந்த படக்குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதன் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”என்றார்.
தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில்,“நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர். படமும் சிவனைப் பற்றி பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்த படத்தின் மூலம்அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை.” என்றார்.
இந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில்,“மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி.” என்றார்.
நடிகர் சௌந்தர் பேசுகையில்.“நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை.படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன்.போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில்,“மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன்.
இந்த படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக்கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும் எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும்.
நம்முடைய பெருமைகளையும் கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளை விட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும். அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார்.
சின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா?பொய்யா? என்பதை சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம்.
கர்மா என்ற ஒன்றிருக்கிறது. அதனை செயல்வினை என்றும் சொல்லலாம்.நாம் நல்லசெயல்களை செய்தால் கர்மா, செயல்வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய்வினை ஆகிறது.
மனிதர்களில் சமநிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் சொல்லியிருக்கிறோம்.
முதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும் போது வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும். ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்னசெய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும்.அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும். அதை போல் மனிதர்கள் தற்போது தன்னைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவனுக்கு. இவனையெல்லாம் ஏன் படைத்தோம்?என்று ஒரு கணம் சிந்தித்தால்... அது என்னவாகஇருந்திருக்கும்? எப்படியிருந்திருக்கும்? அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்? அது தான் இந்த மாயன்.
மாயன் ஒரு ஃபேண்டசி . மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வது தான் மாயன்.
சிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் மாயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல் - கவிஞர் வைரமுத்து
காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து, அவரது மகன் துருவுக்கும் அறிமுகப் பாடல் எழுதியிருந்தார். இளம் காதலர்கள் முதல்முறையாக உணர்ச்சிவசப்பட்டு எல்லை தாண்டுகிற சூழலுக்குப் பாட்டு கேட்டபோது வைரமுத்து கொஞ்சம் யோசித்தாராம். கட்டிலில்கூடக் கலை இருக்கவேண்டுமே தவிர ஆபாசம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளைக் கையாண்டாராம். ஆண் – பெண் நாடகத்தைப் பூடகமாகச் சொல்ல வந்த இந்தப் பாட்டு படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாகிவிட்டதாம். காதலும் படமும் கைவிடப்பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.
இதோ அந்தக் காதல் பாட்டு :
மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே
திரியில்லை தீயுமில்லை – ஆயினும்
திருவுடல் எரியுண்டதே
ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்
காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்
*
பூக்கள் ஒன்றுதிரண்டு
படைகூட்டி வருவதுபோல்
இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே
என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?
ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?
தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி
*
பண்ணும் தொல்லைகளெல்லாம்
துன்ப வாதை செய்கிறதே
இன்னும் தொல்லைகள் செய்ய
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே
திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே
மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே
- உலக செய்திகள்
- |
- சினிமா