சற்று முன்

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா   |    நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா   |    மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த்   |    விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப்   |    திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி   |    சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி   |    தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா   |    ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி   |    சண்டைக்கு தயாராகும் யோகிபாபு   |    ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது   |    பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை   |    தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'   |    விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர்   |    அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு   |    மூன்று அமைப்புகள் முன்னெடுத்துள்ள விண்ணமலை ஏரி சீரமைப்பு பணி   |    ஹீரோவிடமிருந்து மகளை காக்க நடிகையின் தாயார் செய்த வேலை   |    மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தனுஷ் பட போஸ்டர்   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் கண்ணன் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்
Updated on : 10 February 2019

பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து போனதோ அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது 'பூமராங்' என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. ஆம், மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் "பூமராங்" படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கண்ணன், நடிகர் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். "தயாரிப்பு எண் 3" என்ற தலைப்பில் துவங்கப்படும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தன் மசலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இயக்குனர் கண்ணன் கூறுகையில், "ஆம், நாங்கள் 'பூமராங்கிற்கு' பிறகு மீண்டும் இணைவதில் உற்சாகமடைகிறோம். 'பூமராங்' மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதில் நாங்கள்  இருவரும் இரட்டிப்பு  மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் படத்தின் உரிமையை trident ஆர்ட்ஸ் ரவி அவர்கள் பெற்று இருப்பதை பெருமையாக கருதிகிறோம்.  மேலும், பூமராங் முடியும் முன்பாகவே அதர்வாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்கு விருப்பம் இருந்தது. அதற்கு காரணம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அவரது  கவர்ச்சிகரமான மற்றும் அழகான ஹீரோ தோற்றம் மட்டுமல்ல, அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம். இயற்கையாகவே, அவர் தயாரிப்பாளர்களின் வரம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார். பூமராங் பிஸினஸ் நேரத்தில் அதை நானும்  அனுபவித்திருக்கிறேன். ஆரம்பத்தில், என்னுடன் மீண்டும் வேலை செய்ய விருப்பமா? என அவரிடம் கேட்க தயக்கம் இருந்தது. ஆனால் என் சந்தேகங்களை அவர் தகர்த்தார். மேலும், அவர் நான் துரிதமாக செயலோடும் நேர்த்தியை  நேசிக்கிறார் என்று கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இது இந்த படத்திலும் அதே முயற்சியுடன் உழைக்க கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. இப்போது, படம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, 'பூமராங்கில்' இருந்து வேறுபட்ட ஒரு வகை படமாக கொடுக்க முயற்சிக்கிறோம். நிச்சயமாக, அதர்வா எல்லா வகை படங்களிலும் நிரூபிக்கும் ஒரு நடிகர், எல்லா படங்களிலும்  பொருந்தக்கூடியவர். ரசிகர்கள் இதயத்தில் தனி இடம் வகிக்கும் சமுத்திரகனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "அர்ஜுன் ரெட்டி" புகழ் ரதன், பூமராங் படத்திலும் சிறப்பான இசையை கொடுத்திருந்தார். இந்த படத்திலும் அவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வதில் பெருமைப்படுகிறேன்" என்றார். இந்த கோடைகாலத்தில் "தயாரிப்பு எண் 3" படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க  திட்டமிட்டுள்ள நிலையில், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா