சற்று முன்

ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |   

சினிமா செய்திகள்

டாக்டர்ஐசரி .கே.கணேஷ் அவர்கள் கிண்டில்கிட்ஸ் பாடத்திட்டத்தை வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்
Updated on : 10 February 2019

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழுமநிறுவனருமான டாக்டர்ஐசரி .கே.கணேஷ் அவர்கள் கிண்டில்கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத்திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கிவைத்தார்.



Hindu In-School நாளிதழ் ஆசிரியர் திருமதி கிருத்திகாரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் திரு.ஆண்டோனியோஸ்ரகுபான்ஸே,  (தலைவர்பிரிட்டிஷ்கவுன்சில்கல்விப்பணி) அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 



இச்சர்வதேச ப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியபணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ளசி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறுபாடதிட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும்வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் உள்ள முதல்தரம் வாய்ந்த பாலர் பள்ளியான வேல்ஸ்சர்வதேசப்பள்ளியில், கிண்டில்கிட்ஸ் பாடத்திட்டம் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வெற்றி ஆசியாவில் உள்ள பள்ளிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் தலைசிறந்த கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

வேல்ஸ் கல்விநிறுவனம் 25 ஆண்டுகளுக்குமேலாக 25000த்துக்கும் மேற்பட்டமாணவர்களுடன் 25 கல்வி நிறுவனங்கள்மற்றும் 5000க்கும் மேற்ப்பட்ட ஆசிரிய பெருமக்களுடன் கல்வித்துறையில் தனது சீரியபணியை தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் சிங்கப்பூரில் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 'ஒரேகுடையின்கீழ் ' என்ற நிலையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா