சற்று முன்

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா   |    நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா   |    மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த்   |    விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப்   |    திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி   |    சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி   |    தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா   |    ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி   |    சண்டைக்கு தயாராகும் யோகிபாபு   |    ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது   |    பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை   |    தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'   |    விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர்   |    அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு   |    மூன்று அமைப்புகள் முன்னெடுத்துள்ள விண்ணமலை ஏரி சீரமைப்பு பணி   |    ஹீரோவிடமிருந்து மகளை காக்க நடிகையின் தாயார் செய்த வேலை   |    மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தனுஷ் பட போஸ்டர்   |   

சினிமா செய்திகள்

ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும் - S.மோகன்
Updated on : 08 February 2019

ஊடகங்களின் கவனம் முழுவதும் சின்னத்தம்பி என்னும் யானை மீது இருக்க , தற்போது தாய்லாந்தில்  புதிய இயக்குனர் நரேஷ் இயக்கத்தில், ஆரவ் ஒரு  யானையுடன் நடிக்கும்  "ராஜபீமா" படத்தின் செய்திகள் அதற்கு இணையாக வருகிறது." ராஜபீமா ஒரு விலங்கு சார்ந்த திரைப்படம். இப்படத்தில் நடிகர் ஆரவ் உடன் ஒரு யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.  படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர் .கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் , மற்றும் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும்  படமாக்கி வருகின்றனர்.நடிகர் ஆரவ் மற்றும் பீட்டர் எனும் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்த பொழுது, துருதிருஷ்டவசமாக  யானை மேல் இருந்து கீழே விழுந்தார். படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் கட்டுமஸ்தான உடல் வலிமையும், மனத்திடமும் கொண்ட  ஆரவ் , தயாரிப்பு தரப்பிலிருந்து முதலுதவி வருவதற்குள் படப்பிடிப்பில் இணைந்தார். "இதுவே அவரின் அர்பணிப்பையும் பேரார்வத்தையும் காட்டுகிறது.  இன்னும் 7 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவுபெரும். சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும்" என்றார் தயாரிப்பாளர்  S.மோகன் , சுரபி பிலிம்ஸ்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா