சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? - வைரமுத்து
Updated on : 16 January 2019

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட்நகர் 

மாநகராட்சிப் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவிக் கவிஞர் வைரமுத்து திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினார். 



சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம், 

சுவிட்சர்லாந்து சுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணாமூர்த்தி, வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட வெற்றித்தமிழர் பேரவையினர் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாகக் கர்நாடக இசைப் பாடகி கடலூர் ஜனனி திருக்குறளை இசைப்பாடல்களாகப் பாடினார் , பிறகு கவிஞர் வைரமுத்து உரத்த குரலில் திருக்குறள்களைச் சொல்லச்சொல்ல, கூடியிருந்த குழந்தைகள் பின்மொழிந்தார்கள், விழாவில் திருவள்ளுவர் திருநாள் செய்தியாகக் கவிஞர் வைரமுத்து ஊடகங்களோடு பேசியதாவது: 



“உலகத்தமிழர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள். திருக்குறள் படைத்த புலவர் என்று மட்டும் திருவள்ளுவரைக் கருதிவிடமுடியாது. அவர் ஒரு புரட்சியாளர். மதுப்பழக்கம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து வந்தது, அதை யாரும் ஒரு பாவமாகக் கருதாத காலமது. ஆனால் “கள்ளுண்ணாமை” என்ற அதிகாரம் எழுதி மதுவுக்கு எதிராக  முதல் கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர். “புலால் உண்ணாமை” என்ற அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக இறைச்சிக்கடைகளை ஒருநாள் மூடுகிற முடிவெடுக்கிற நாம், கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்? 



2018-19ஆம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு 1,76,251 கோடி வருமானம் கிட்டும் என்று அறியப்படுகிறது. இதில் மதுக்கடைகளால் பெறப்படும் வருமானம் மட்டும் தோராயமாக 20,000 கோடி என்று குறிக்கப்படுகிறது. மதுவால் 20,000 கோடி ஈட்டுகிற அரசு 20 சதவிகித மக்களை அதனால் பாழ்படுத்துகிறது. 



இந்த நாட்டின் பெரும்பாமையான விபத்துக்களுக்கு காரணம் மது. குடும்பங்களைக் குலைப்பது மது. அனாதைச் சிறுவர்களை உண்டாக்குவது மது. கொலைகளை அதிகரிப்பது மது. தற்கொலைகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போவது மது. 



நான் கிராமத்தான்  இன்னும் கிராமத்தில் வாழுகிறவன், இன்றைய கிராமத்தில் சென்று பார்த்தால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிப்போனார்கள், நரைத்த தலைகளைப் பார்க்க முடியவில்லை ஊருக்கு வழி காட்டும் கிழவர்கள் அதிகம் இல்லை. 15வயதில் குடிக்க தொடங்கியவர்கள் 50வயதுக்குள் அடியாகிப்போகிறார்கள். தமிழர்களைக் கொன்றுவிட்டு எப்படித் தமிழ்நாட்டை வாழவைக்கப் போகிறோம்? தமிழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுகிற இந்த மதுவை ஒரே நாளில் ஒழிக்கமுடியாவிட்டாலும் படிப்படியாக ஒழிப்பதற்கு அடிப்படைத் திட்டங்களை உருவாக்க வேண்டும். மதுவை எந்த ஆட்சி ஒழிக்கிறது என்பது முக்கியமல்ல; எந்த ஆட்சி ஒழித்தாலும் அதுதான் மக்களாட்சி என்று கொண்டாடப்பெறும்.” 



இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார் 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா