சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

சிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா!
Updated on : 15 January 2019

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ரசிகர்களை உடனடியாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக காமெடி படமான இது அனைவரையும் வசீகரித்துள்ளது. கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்த படம், தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று மாலை 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' என்ற தலைப்பை மகத் ராகவேந்திரா வெளியிட்டார்.



STRன் ஒரு வெற்றி படத்தின் புகழ்பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் மகத். இந்த படத்தில் STRன் தீவிரமான ரசிகராகவும்  நடித்திருக்கிறார் மகத்.



இயக்குனர் பிரபு ராம் சி கூறும்போது, "மகத் ஒரு வட சென்னை இளைஞராக, STRன் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்தது, அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன். STR ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தலைப்பு வைக்கப்பட்டதா என்பது குறித்து அவர் பதிலளிக்கும்போது, இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்" என்றார்.



தரண் இசையமைத்துள்ள இந்த படத்தில் என்னியன் ஜெ ஹாரீஸ் (ஒளிப்பதிவு), பிரவின் பாஸ்கர் (எடிட்டர்), கிஷோர் (கலை), லோகன் (பாடல்கள்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்), சாண்டி (நடனம்) மற்றும்  கண்ணன் (SFX) ஆகியோரும் பணிபுரிகிறார்கள்.



வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா