சற்று முன்

சர்ச்சையில் சிக்கிய வால்டர் படத்தின் தலைப்பு - சிக்கல் தீர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சி   |    மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் ராக்கெட்ரி   |    சுசீந்திரன் இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம்   |    சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட 'தும்பா' படக்குழுவினர்   |    'பிரேக்கிங் நியூஸ்’ ஜீவனாக மாறிய ஜெய்   |    வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்   |    சீனு ராமசாமியின் சமுதாய அக்கறை   |    51,682 சதுர அடி பரப்பளவில் 10 திரைகள் கொண்ட புதிய PVR மல்டிபிளக்ஸ்   |    விஜய் பிறந்தநாளையொட்டி 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்   |    பாசிட்டிவ் பல விருதுகள் பெற்ற குறும்படம்!   |    முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி   |    ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்   |    பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன்   |    விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மக்களை வியக்கவைத்த அருவம் டீசர்   |    விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்   |    நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா   |    கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து   |    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’!   |    ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |   

சினிமா செய்திகள்

கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்
Updated on : 12 January 2019

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார். 



இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.  



இந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு  அறிமுகமாகியுள்ளார். எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா..



'சகலகலா வள்ளி'  எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு  நடனம் அமைத்துள்ளார். கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெளியானது. 



'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா