சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்காக கண்ணம்மா பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார் அனிருத்
Updated on : 10 January 2019

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உச்சத்தில் இருக்கும் சாதனை சிலரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தான் அனிருத், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு நேரடி உதாரணமாக செயல்படுகிறார். அவர் அனைத்து பாடல்களில் தன்னுடைய தனித்துவத்தால் அனைத்து வயதினரையும் பாடலை கேட்க வைத்து விடுவார். அனைத்து வகைகளிலும் பாடல்களைப் பாடுபவர் என்று அறியப்படும் அனிருத், தமிழ் சினிமாவின் மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல உறவை பேணுவதோடு, அவர்கள்  இசையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடுவது, புதிதாக வரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்துக்காக 'கண்ணம்மா' என்ற ஒரு இனிமையான மெலோடி பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார். 



படக்குழுவினர் நாயகனின் காதல் குணாதிசயங்களை ரசிகர்களுக்கு அனிருத்தின் மந்திர குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனிருத்தை அணுகினர். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளபடி, எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த பிடிவாதமான காதல் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் ஜோடியாக நடிக்க, நடிகர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பால சரவணன் காமெடியில் கலக்குகிறார்கள். இந்த அழகான காதல் கதையை "புரியாத புதிர்" புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க, மாதவ் மீடியா சார்பில் ல் பாலாஜி கப்பா தயாரித்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா