சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

சினிமா செய்திகள்

10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருதுகள் அறிவிப்பு
Updated on : 10 January 2019

சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்  இருந்து எமது நடுவார்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில்  2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறியத்தருகின்றோம்.



அந்த வகையில் சிறந்த படமாக பா.ரஞ்சித் அவர்களால் தயாரிக்கப்பட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு உருவான ‘பரியேறும் பெருமாள்" திரைப்படம் அதி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே போல எமது நடுவார்களால்  சிறந்த இயக்குனராக "மேற்கு தொடர்ச்சி மலை" இயக்குனர் லெனின் பாரதியும், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக திரிஷா கிருஷ்ணன் அவர்களும்  96 திரைப்படத்தில் நடித்தமைக்காக தமிழர் விருதினை பெற்றுக்கொள்ள உள்ளனர். 

நோர்வேயில் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்களுக்கான சிறந்த திறமைசாலிகள்  தேர்வு செய்யப்பட்டு "தமிழர் விருதுகள்" வழங்கப்பட்டு வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதே மொழித் திரைப்படங்களுக்கான திரையிடலும், போட்டிகளும் நடைபெற்று தமிழர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் வெளியான திரைப்படங்களில்  2019-ஆண்டுக்கான ஏனைய திரைப் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் 'கனா' திரைப்படத்தை தயாரித்தமைக்காகவும், சிறந்த இசையமைப்பாளராக  ‘பரியேறும் பெருமாள்’, 'வட  சென்னை ’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த  சந்தோஷ் நாராயணனும் தேர்வாகியிருக்கின்றனர்.



மேலும் சிறந்த பாடகிக்கான விருது ‘96’ படத்தில் காதலே காதலே  என்ற பாடலை பாடியதற்காக சின்மயீ ஸ்ரீபடா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘தான சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சொடக்கு மேல, அடி வெள்ளக்கார  என்ற பாடலைகளைப் பாடிய  அந்தோணி தாசனுக்கு வழங்கப்படுகிறது.



வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குனர், நடிகர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கலைச்சிகரம் விருது நடிகர், நகைச்சுவையாளர் விவேக் அவர்களுக்கு சமூக அக்கறையுடன் உழைப்பவர் என்ற காரணத்திற்க்காக வழங்கப்படுகின்றது.



தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச்  சொல்லி, கலை, பண்பாடு, வரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள்  

கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி, நெருக்கிய தொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா தொடர்ந்தும் வளர்த்து வருகின்றது. நோர்வேயிய அரசின், ஒஸ்லோ, லோரன்ஸ்கூ நகரசபைகளின் மிகப் பெரிய அங்கீகாரத்தினை பெற்று சிறப்பான விழாவாக உருவெடுத்துள்ளது. 



இத்தனை வருடங்களாக எமக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பத்திரிக்கைகள், இணைத்தளங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள்  மற்றும் மக்கள் தொடர்பாளர்கள், அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவுத்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும் எமக்கான ஆதரவினை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணம் தொடர்கின்றது. 2014 ஆம் ஆண்டில் இருந்து எமது மக்கள் தொடர்பாளராக பணியாற்றும் நிகில் முருகன் அவர்களுக்கு எமது நெஞ்சு நிறைந்த நன்றிகள்.



இந்த விருதுகள் வழங்கும் விழா நோர்வேயின் தலைநகரமான ஒசுலோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது. தமிழர் விருதினை நோர்வே நாட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள உள்ள கலைஞர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும் 



ஏனைய பிரிவுகளில் தமிழர் விருது பெற்றவர்களின் விபரங்கள் கீழே தருகின்றோம்.

மின்னஞ்சல் : tamilfilmfestival@gmail.com 



10 வது நோர்வே தமிழ்த்  திரைப்பட விழா 2019 குழுவினால் 

தெரிவான  20 திரைப்படங்கள்:  

01.பெரியேறும் பெருமாள்- மாரி செல்வராஜ் 

02.மேற்கு தொடர்ச்சி மலை -லெனின் பாரதி 

03.கனா - அருண் ராஜா காமராஜ் 

04.96 - பிரேம்குமார்

05.கடைக்குட்டி சிங்கம் - பாண்டிராஜ்

06.வட சென்னை - வெற்றிமாறன் 

07.இரும்புத்திரை - பி.எஸ்.மித்திரன் 

08.காற்றின் மொழி - ராதாமோகன் 

09.நடிகையர் திலகம் - நாக் அஸ்வின் 

10.காலா - பா.ரஞ்சித் 

11.லட்சுமி - ஏ.எல்.விஜய் 

12.சீதக்காதி பாலாஜி தரணிதரன் 

13.ஒரு குப்பைக் கதை - காளி ரங்கசாமி 

14.கோலமாவு கோகிலா -நெல்சன் 

15.அடங்க மறு -கார்த்திக் தங்கவேல் 

16. ராட்சசன் - ராம்குமார் 

17. இமைக்கா நொடிகள் - ஆர்.அஜய் ஞானமுத்து 

18.டிக்.டிக் - சக்தி சவுந்தர் ராஜன் 

19.பியார் பிரேமா காதல் - இளன்

20. அண்ணனுக்கு ஜே

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா