சற்று முன்

பாசிட்டிவ் பல விருதுகள் பெற்ற குறும்படம்!   |    முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி   |    ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்   |    பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன்   |    விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மக்களை வியக்கவைத்த அருவம் டீசர்   |    விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்   |    நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா   |    கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து   |    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’!   |    ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |    போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்   |    சுவையை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைவ மற்றும் அசைவ உணவுகள்   |    அரவிந்த்சாமி நடிக்கும் டிடெக்ட்டிவ் திரில்லர் படம்   |    என் முகத்தை பார்த்துவிட்டு இது ஹோம்லியான கதபாத்திரமாச்சே என தயங்கிய இயக்குனர்   |    மதுரை தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணம்   |    பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |   

சினிமா செய்திகள்

ஹரிஷ் ராம் LH இயக்கும் படத்தில் தர்ஷன்
Updated on : 07 January 2019

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்த 'கனா' படத்தில் அப்பாவியான புன்னகை, யதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவை மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தவர் நடிகர் தர்ஷன். இந்த படத்தையும், இதை வெற்றி படமாக்க உழைத்த ஒவ்வொரையும் மக்கள் பாராட்டி வருகிறார்கள். நடிகர் தர்ஷன் மட்டும் விதிவிலக்கல்ல. தர்ஷன் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒருவராக மாறியிருக்கிறார். இந்நிலையில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP & ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். 'ப்ரொடக்‌ஷன் நம்பர் 1' என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஹரிஷ் ராம் LH இயக்குகிறார். அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்துக்கு இசையமைப்பது அனைவரின் கவனத்தையும் படத்தின் மீது திசை திருப்பியிருக்கிறது.



நகைச்சுவையான குடும்ப சாகச  பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு தர்ஷன் மிக பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் தயாரிப்பாளர்கள் அவரை நாயகனாக்கி இருக்கிறார்கள். "குறிப்பாக கனாவில் அவரது குளிர்ச்சியான, எளிமையான, கவரும் நடிப்பை பார்த்த பிறகு, இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் கொடுக்க அவர் தான் சரியாக இருப்பார் என்று உணர்ந்தோம்" என்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம் LH. அறிமுக இயக்குனரான இவர் இதற்கு முன்பு இயக்குனர் துரை செந்தில்குமாரின் எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.



தங்களின் மாயாஜால இசையால் இளைஞர்களை மயக்கியிருக்கும் அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைத்திருப்பதால், இந்த படம் ஒரு இசை விருந்தாக இருக்கும் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உதவியாளர் நரேன் இளன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் (படத்தொகுப்பு), நூர் (ஸ்டண்ட்ஸ்), ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் AR (உரையாடல்), வாசுகி பாஸ்கர் & பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஒலி வடிவமைப்பு) டி உதயகுமார் & வினய் ஸ்ரீதர் (ஆடியோகிராஃபி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். 



இந்த படத்தில் நிறைய VFX காட்சிகள் இருப்பதால், VFX உலகின் மிகப்பெரிய திறமையாளர்களான வில்லவன் கோதை G, (VFX கிரியேட்டிவ் இயக்குநர்), ரெங்கராஜ் J (VFX இயக்குனர்) மற்றும்  சந்திரமோகன் J (VFX தயாரிப்பாளர்) ஆகியோரை படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா