சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அர்ஜுன் உதய் - மாளவிகா வேல்ஸ் நடிக்கும் அழகு மகன்
Updated on : 25 July 2018

அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "அழகு மகன்" என்று பெயரிட்டுள்ளனர்.



இந்த படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.



கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார்.



மற்றும் இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி  நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்



ஒளிப்பதிவு  -  அகு அஜ்மல்

இசை  -   ஜேம்ஸ் வசந்தன்

பாடல்கள்     - யுகபாரதி, தாமரை,மோகன்ராஜ்.

கலை -  முருகன்

எடிட்டிங்  -   மகேஷ்.G.K

சண்டை பயிற்சி  -   பயர் கார்த்திக் 

நடனம்   -  ராதிகா.



கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அழகன் செல்வா... இவர்  இயக்குனர் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.



இவர் இயக்கும் முதல் படம் இது.



தயாரிப்பு  -   செல்வி ராஜேந்திரன், ஞானதேஸ் அம்பேத்கார்



படம் பற்றி இயக்குனர் அழகன் செல்வாவிடம் கேட்டோம்...



இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்.



தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம்.



அன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு தென்மாவட்ட மண்ணின் மகிமையையும் அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம்.  அர்ஜுன் உதய் மற்றும் அவர்களது நண்பர்களும் எதிர்கால சிந்தனை எதுவுமின்றி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். நான்கு நண்பர்களும் நான்கு விதமான வாழ்க்கை சூழ் நிலையில் வாழ்பவர்கள்.



அர்ஜுன் உதய்க்கும் மாளவிகா வேல்ஸ்க்கும் அழகான காதல் ஒரு பக்கம்..



இதற்கிடையே அர்ஜுன் உதய் ஒரு பிரச்சனையில் சிக்க, அதனால் அவனது வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகிறது



அவனுக்கு மட்டுமல்லாமல் அவனது நண்பர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதும் கதை.



முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது. .



படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் தேனி போடி கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.



ஆகஸ்ட் 3 ம் தேதி படம் வெளியாகிறது.



படத்தை பார்த்த பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீ முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் என்றார் இயக்குனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா