சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

எம். ஜி. ஆர் திரைப்படத்தின் டீஸர் வெளியீடு
Updated on : 25 July 2018

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’  எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது .



இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட  பிரபல விளம்பரப்பட நாயகன்  சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார் . எம். ஜி.ஆரின்  மனைவி  ஜானகி அம்மையாராக ரித்விகாவும், M .R . ராதாவாக பாலாசிங்,  இயக்குநர் பந்துலுவாக Y .G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.



ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார்.



எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.



அதே போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும்  என்பதால் எம். ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களான கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம்,  மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர் . இப்படத்திற்கு  ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளனர்.



அடுத்த வாரம்  இத்திரைப்படத்தின்  ‘டீசரை’ வெளியிட உள்ளதாக ‘எம். ஜி. ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர் அ. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .



சென்ற ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா