சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது - அபர்ணா வினோத்
Updated on : 18 July 2018

நாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே திரைப்படத் துறைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறார்கள். இந்த நடிகர்கள் வழக்கமான நடிகர்களை தாண்டும் வகையில், மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். அபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த  நடிகையாக இருக்கலாம், ஆனால் மிகச்சிறந்த நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டின. ஆரம்பத்தில், விஜய்யின் பைரவாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பரத்தின்  பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.



"நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அது தான் 'ஞான் நின்னோடு', 'கோஹினூர்' போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் விஜயின் பைரவாவில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்த 22 வயதான அபர்ணா வினோத்.  



பரத் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க  எவ்வாறு தேர்வானார் என்று அவரே விவரிக்கும்போது, "இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியான நீதியைச் செய்வேன் என்று உணர்ந்தனர். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். எனக்கு 22 வயது. தாய், ஆசிரியராக நடிப்பது மிக சவாலானது. இது என்னுடைய ஜோனுக்கு அப்பால் இருக்கிறது. ஆனால் என் கதாபாத்திரம் கேட்கும் விஷயங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்" என்கிறார்.



கடவுளுடைய சொந்த தேசத்தில் அவரது சக நடிகர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்பதை அவரே விசேஷமாக விவரிக்கவும்  தவறவில்லை. "அவரது '4 தி பீப்புள்'  வெற்றி பெற்றதிலிருந்தே, அவர் அங்கு மிகவும் பிரபலமான நடிகர். கண்டேன் காதலை படத்தில் அவரது நடிப்பை நான் பார்த்திருந்தேன், அவர் காட்சிகளுக்கு தேவையான மிகவும் யதார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார்.



சீட்டின் நுனிக்கு வர வைக்கும் பெயரிடப்படாத இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் நடிகர் ஷரண் (இனிது இனிது மற்றும் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) இயக்குனராக  அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்க இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா