சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

கிழக்கு ஆப்பிரிக்காபில் ராஜூ படம் உருவாக மிக முக்கிய காரணம்
Updated on : 16 July 2018

உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 15ஆம் தேதி) காலை 9 மணிக்கு தொடங்கியது. தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். விழாவின் முத்தாய்ப்பாக அனிமேஷனில் தயாராகி வரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடும் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ஏசி சண்முகம் மற்றும் சைதை துரைசாமி இசைத்தகட்டினை வெளியிட நடனப்புயல் பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் பெற்றுக் கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது படத்தை பற்றியும், எம்ஜிஆர் அவர்களை பற்றியும் பேசினர். 



இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர் தான். ஒன்று எம்ஜிஆர், அவர் தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ். அவர் கொடுத்த முழு சுதந்திரம் தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. வைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் இயக்குனர் அருள்மூர்த்தி.



இங்கு வந்திருக்கிற எல்லோருமே எம்ஜிஆர் ரசிகர்கள் தான். அவர் மீது உள்ள அன்பு, மரியாதை தான் இதற்கு முக்கிய காரணம். ட்ரைலர் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. வைரமுத்து சார் பாடல்கள் எழுதியிருக்கிறார், அதை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. புரட்சிதலைவருக்கான வரிகளை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் என்றார் இயக்குனர் விஜய்.



எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன. என் அப்பா எம்ஜிஆருக்கு 4 படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மிகவும் மெய் மறந்தேன் என்றார் நடனப்புயல் பிரபுதேவா.



விழாவில் ஐசரி கணேஷ், சைதை துரைசாமி, ஏசி சண்முகம், நடிகர் ஆர்ஜே பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஆர்ஜே விஜய் இசை விழாவை தொகுத்து வழங்கினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா