சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

சாந்தினி நடிக்கும் ஹாரர் த்ரில்லர்
Updated on : 23 April 2018

'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..! 



 



சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..



 



அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’  என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். 



 



இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன்  பிரான்ஸ் நாட்டு  குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன்  சுவிஸ் நாட்டு  குடியுரிமை பெற்றவர். 

திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி  நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர். 

தற்சமயம்  இருவரும் பிரான்ஸ், சுவிஸ்  & இந்தியாவில் Resort and Restaurant  நடத்தி வருகிறார்கள்.



 



ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன். 



 



பிரபல   இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.



 



இப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் உயர் திரு. ராஜேஷ் தாஸ்  I.P.S ( ADGP Prohibition Enforcement, Tamilnadu ) அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.



 



விரைவில்  இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா