சற்று முன்

திரைப்பட படைப்பாளிகளுக்கு பிரபல நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பொன்னான வாய்ப்பு!   |    ‘மல்லி’ க்காக இணைந்த 80'ஸ் கதாநாயகிகள்   |    நீட் தேர்வின் மூலம் ஏற்படும் அவதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அஞ்சாமை’!   |    ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட 'கருடன்' இசை வெளியீட்டு விழா   |    வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |   

சினிமா செய்திகள்

'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது
Updated on : 10 May 2024

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தீரா..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 



 



'சேத்துமான்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார்  மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். 



 



மே மாதம் 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..' என தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெலோடி பாடலாக தயாராகி இருக்கும் இந்தப் பாடல் திரையிசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பெற்று சார்ட் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா